25 December 2006

பெரியார் 'சிலை' யானார்!'

"எலேய் வெங்காயம், சூரமணி, எந்திரிடா"குர்..ர்....ர்ர்...குறட்டை விட்டுத் தூங்கறான்யா,எலேய், எந்திரி..."உஹ¥ம், கையிலிருந்த கைத்தடியால் ஓங்கி ஒரு போடு!"ஹ, யாரு?""ராமசாமி''சூரமணி கண் விழிக்கிறான். நெஜமாகவே பேந்தப் பேந்த விழிக்கிறான்!கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறான்!"யாரு? ஸாரி, நேத்து கனிமொழியோட மீட்டிங் பேசப் போயிட்டேன்ல? அதான். சரி, யாரு நீங்க? ராமசாமியா? ஓ, ஈ.வே.ராமசாமியா.. அயோ, பெரியாருங்களா!? தமாசு பண்ணாதீங்கண்ணா, சத்தியராஜுன்னு சொல்லுங்க! பரவாயில்லையே/ பெரியாரைத்தான் பார்க்க முடியல,அட்லீஸ்ட் சத்தியராஜ பெரியார் கெட்டப்ல பார்த்துட்டேன். இருங்க, கையும் ஓடல, காலும் ஓடல! படார்னு ஓடிப்போய் என் மச்சினன் கிட்ட போய் காமெரா மொபைல் வாங்கியாறேன். ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக்குவோம். அப்புறம் என் ரேஞ்சே வேற!"
மீண்டும் தடியால் ஒரு போடு போடுகிறார்!
"உருப்படாத பயலே, யார்றா அது சத்தியராஜ், ஓ அந்த நடிகரா, எல்லாஞ் சரிதான் ஆனா அவரு என்னவிட ரொம்ப உசரம்; அத வெச்சு கூடவா நான் யாருன்னு கண்டு பிடிக்க முடியல?""தாடி வெச்சவனெல்லாம் பெரியாரா, குறும்பு!" படீரென தாடியை இழுத்துப் பார்க்கிறான்.மீண்டும் அடி! "அந்த சத்தியராஜ் சத்தியமா சோல்றேன், நான் பெரியாரேதான்!"நம்ப முடியாமல் பார்க்கிறான்."தலிவா; அதான் செல வெச்சுட்டோம்ல - அப்புறம் எதுக்கு எந்திரிச்சு வார?""நீங்க பண்ற குளறுபடி தாங்கலடா, அதான் வந்துட்டேன்!"
அதுக்குள் குப்பம் முழுதும் கூட்டம் கூடிவிட்டது!
எல்லாரும்'பெரியாரை'ப் பார்த்து, கட்டாயம் சத்தியராஜ் தான் என்று முடிவு செய்து,முண்டியடித்து, தொடவும், பேசவும் முயல்கிறார்கள்! பலர் பேச முற்படுகிறார்கள்!"தலைவா, என்னம்மா கண்ணு சவுக்கியமா?" அதற்கு அடுத்தவன், "பாத்தியா உங்கிட்டயே சவுக்கியத்த கேக்குறான்,டேய் தலைவர் கைல இருக்குற குச்சியால நிஜமாலுமே ஒரு குத்தாட்டம் ஆடினார்னா, நீ பீஸ் ஆயிடுவே! போடா அந்தாண்ட...! இன்னொருத்தன்," சத்தியராஜ் அண்ணே, நீங்க நெஜம்மாலுமெ பெரியாள்ணே! அந்த பக்கம் நமீதாவ நெம்பி, தொப்புள் க்ளோஸ் அப் பார்க்குறீங்க, இந்த பக்கம் வந்து பெரியாரா ஆக்ட் குடுக்கறீங்க, எப்படி தலைவா முடியுது!"
பெரியாருக்கு 'மண்டை காய'த் தொடங்குமுன், செய்திகேட்டு, நக்கல் கீரன் பத்திரிகை நிருபர் வந்து சேர்ந்துவிட்டார்!"ஹலோ, ஐ ஆம் 'சண்ட்ர ஷேகர்' ரிபோர்ட்டர் ஆ·ப் நக்கல் கீரன், உங்கல் வேட்டி எடுக்கணும், ஸாரி பேட்டி எடுக்கணும்,""ஹ¥ம்? உங்கல் வேட்டி எடுக்கணும், பேட்டி எடுக்கணும்னு, என்னப்பா தமிழ் கொலையா இருக்கு? அதுக்கு உன்னய வெட்டி எடுத்துறலாம்!" அவருக்கேயான பாணியில் சிரிக்கிறார்.பெரியார்," அது சரி, பேரென்ன சொன்ன, சன் ஷேடா? அப்படீன்னா ஜன்னல் நிழற்தட்டின்னுல்ல அர்த்தம்? வந்துட்டாய்ங்க! ஓ, சந்திரசேகரா? அப்ப, தமிழ்ல அழகா 'பிரைசூடன்'ன்னு சொல்லலாமே!""அது சாமி பேராச்சே, தலைவர் அதெல்லாம் சொல்லமாட்டார்" - கோபத்துடன் சூரமணி!"வெங்காயம்; ஒண்ணு சமஸ்க்ருதம், வடமொழி. இன்னொண்ணு தமிழ். எதுல சொன்னாலும், சாமி பேரு வருதே! நம்பிக்கை இருக்கோ இல்லையோ, தமிழக் கொல செய்யாம இருந்தாச் சரி!"சந்திரசேகர்: அப்ப மிஸ்டர்.பெரியார், உங்களுக்கு சாமி மேல வெருப்பெல்லாமில்லையா?""எவண்டா இவன் திருப்பி திருப்பி? சோம்பேறிப்பயலுவ, புளியோதரையும், பொங்கலும் ஓசில சாப்டு, அப்படியே ஓரத்துல சாஞ்சுக்கறான். விழிப்பு வந்தா, கைய நீட்டி பிச்ச கூட எடுக்கறான்! சரி, இப்படி சவுரியமா போச்சு, உக்கார்ந்த மாதிரியே கைல காசு, வாயில தோச கிடைக்குதுன்னு, அப்படியே கோவில்லயே உக்கார்ந்துர்றான்; அந்த மாதிரி பொருப்பத்த தமிழ் பயலுகள சுறுசுறுப்பாக்கணும்னு, கோவில் பக்கம் போகாதன்னு சொன்னேன்; மத்ததெல்லாம் விட்டுட்டான், ஆனா கோவில் எதிர்ப்பு மட்டும் செஞ்சுகிட்டிருக்கான்!"சரி, கோவிக்காதீங்க! வேற ...இடையில் ஒரு பொதுசனம் குறுக்கிட்டு,"அய்யா, நீங்கதான் பெரியாருன்னா, இந்த முல்லை பெரியாரு மேட்டரை வந்த கையோட சரி பண்ணுங்களேன்! ஒரே ரவுசா இருக்கு! அது உங்க இடம்தானா? பட்டா கிட்டா ஏதும் கொண்டாந்தீங்களா?இப்ப உங்க பேரு ரிப்பேரு பண்ற மாதிரி யாருக்கும் நடக்கக் கூடது பாருங்க, அதுக்குத்தான் சொல்றேன்!'
"அடபாவிகளா, எந்த ரெண்டையும் முடிச்சு போடுறதுன்னு விவஸ்தையே இல்லையா? அது தனி விஷயம். பெரிய ஆறுங்கறது, 'பெரியாறு' ன்னு மருவி, அந்த பேரு வந்துச்சு!
"சரி, எவன் என் சிலைய அந்த ஸ்ரீரெங்கம் கோபுரத்துக்கு எதிரே வைக்கச்சொன்னாங்க?"சூரமணி, "அய்யா, அப்ப நீங்க நெஜமாலுமே பெரியாரா? காலில் விழுகிறான்."உங்களுக்கு சேவை செஞ்சே வாழ்ந்திருக்கேன்; இப்ப எதொ தலைவன்னு என்னை சொல்றாங்க. உங்கள் கொள்கைங்க, இந்த சாமி கும்புட போறவங்க மனசுல படணும்னுதானே, நம்ம பயலுக எவனோ சிலை வெச்சான்? கவலை படாதீஇங்க தலைவரே, அவனுங்க கல்லுல வெச்சா உடச்சாங்கல்ல, நான் வெங்கலத்துலயே புது செலை செஞ்சு வெச்சுட்டேன்; இனி எவன் என்ன செய்றான்னு பார்க்கறேன். இதுமட்டுமில்ல, இன்னும்128 கோவில் வாசல்ல வெங்கல சிலை வெக்க ஏற்பாடுங்க நடக்குது!"
பெரியார் கோபமாக,"டேய், சாமி, உருவ வழிபாடு ரெண்டையுமே நான் தீவிரமா எதிர்த்தேன். இப்ப என்னடான்னா, போதாக்குறைக்கு ரொம்ப கனமா, என்னால எழுந்திருக்கவே முடியாதபடி, வெங்கலத்துல செஞ்சு, சாமி இல்லைன்னு சொன்ன எனக்கே,தினமும் அந்த பெருமாள் மூஞ்சீல முழிக்கிற மாதிரி பண்ணிட்டீங்களேடா! பாவி பயலுகளா! சிலை வேணம்னு சொன்னேன், இப்ப கண்ட காக்கா, குருவி எச்சத்த தலைலவாங்கிகிட்டு, நான் வெயில்லயும், மழைலயும் நிக்கணுமாக்கும்? தொண்டருங்கங்கற பேர்ல, கொள்கைக்குப்புறம்பா, எனக்கே சிலை, உருவ வழிபாடு! பாழா போச்சு போ! போதாக்குறைக்கு, மாலை, கற்பூரம், ஊதுபத்தி வேற!"
சூரமணி, "இல்ல தலைவரே, நமக்குன்னு எதாவது ஒரு வேல வேணாமா, அத்தன் அப்பப்ப..."
"அப்பப்ப, ஒத்து ஊதறயாக்கும்? முதல்ல அம்மாவோட கூட்டு, கொஞ்சம் கலெக்ஷன், அப்புறம் ஐயாவோட கூட்டு, சே, ஒரு தனித்தன்Mஆஇ இல்லாமலே போச்சு!"
"இல்லயே, நேத்துகூட, கனிமொழி, பொன்முடி கலந்துகிட்ட விழால, பெண்கள் உரிமை பத்தி பேசுனேனே?""வெங்காயம் உரிமை. நான் கேட்டது, சமுதாயத்துல சம உரிமை. நீ என்னடான்னா, வெவரம் இல்லாம, கோவில் அர்ச்சகர்களாக, மத்த சாதிசெனத்தோட பெண்களுக்கும் பங்கு தரணும்னு அந்த பொண்ணு கனிமொழி சொல்றச்ச, அதுக்கு ஆமோதிச்சு, "ஆமாம், ஆமாம், பொண்ணுங்களும் பூசாரி ஆகணும்,"னு ஓங்கி ஜால்ரா அடிச்சிருக்கே! மடையா, சாமியே இல்லேன்னேன், அப்புறம் பூசாரி எங்கயிருந்து வந்துச்சு? அது பொம்பளயா இருந்தா என்ன, ஆம்பளையா இருந்தென்ன? எதுக்குத் தான் மண்டையாட்டறேன்னு விவஸ்தை இல்லாம போச்சு! உனக்கு, நமக்குன்னு ஒரி கொள்கை வேணும்டா. ஆளுங்கட்சி,திடீர்னு கோவில்ல மணி அடிச்சா, நீ வெளக்கு பிடிப்ப போலருக்கே?"
உடன் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தொண்டன், அவசரமாக, "அதெல்லாம் இல்ல தலைவரே, எங்களுக்கு நீதான் சாமி. உனக்குதான் சிலை வெப்போம். ஏன் வேணும்னா, கோவில் கூடகட்டுவோம், சொல்லு தலைவா, நெஞ்சக் கீறி, "எங்க கடவுள் பெரியார்,"னு சொல்லி நெத்தில பொட்டு வெக்கவா,சொல்லு," என்று உணர்ச்சிவசப்பட்டான்!
"இவனுங்களை திருத்த முடியாது." என்று மீண்டும் பெரியார், வேறு வழியில்லாமல், 'சிலை'யானார்!

(இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள், கற்பவையே! பெயர் ஒற்றுமை, கருத்து ஒற்றுமைக்கு நானும் பெரியாரும் பொறுப்பல்ல!)

13 comments:

Hariharan # 03985177737685368452 said...

சந்துரு,

மேற்படி வீர தீர சூரமணி ஆளுங்கட்சிக்கு ஆதரவா ஜல்லியடித்து அடிவருடும் செயலைத்தவிர ஏதாவது மக்கள் பயனுக்கு செய்ததாக செய்தி இருக்கா? (வெங்காய டிரஸ்டின் சொத்து அனுபவிப்பு என்கிற பிரதான செயல் தவிர்த்து)

சுயமரியாதைச் சிங்கம், பகுத்தறிவுப்பகலவன்-2 (அ) 3 சூரமணி வெங்காயத்தின் சிலைகளுக்கு சூடம், சாம்பிராணி கொளுத்திவருவது சமீபத்திய சாதனை!

எனக்குத்தெரிந்து நல்லது எதையுமே செய்யாத ஒரு பிறவி சூரமணி!

VSK said...

இந்த பதிவு தேவையா, எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் என ஒரு முறை உங்களைக் கேட்டுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

எந்தத் தலைப்பில் இதனைப் பதிவு செய்யினும்,
இது போன்ற மற்றவரை முகம் சுளிக்க வைக்கும் பதிவுகளை இடாமல் இருக்க இனியாவது உங்களைப் போன்ற அனுபவமிக்க படிவர்கள் முயலாலமே!

தவறாக ஏதேனும் சொல்லியிருப்பின் மன்னிக்கவும்.

புத்தாண்டு வாழ்த்துகள்!

Machi said...

/ சத்தியராஜ் அண்ணே, நீங்க நெஜம்மாலுமெ பெரியாள்ணே! அந்த பக்கம் நமீதாவ நெம்பி, தொப்புள் க்ளோஸ் அப் பார்க்குறீங்க, இந்த பக்கம் வந்து பெரியாரா ஆக்ட் குடுக்கறீங்க, எப்படி தலைவா முடியுது!"
/

எலேய் நான் நடிகன்டா, இயக்குனர் நமீதாவை நெம்ப சொன்னா நெம்பறதும் பெரியார் மாதிரி பேச சொன்னா பேசறதும் என் வேலை அத புரிஞ்சுக்கங்க. - சத்தியராஜ்


/தினமும் அந்த பெருமாள் மூஞ்சீல முழிக்கிற மாதிரி பண்ணிட்டீங்களேடா! பாவி பயலுகளா!/

இல்லிங்க தலைவரே உங்களால பார்க்க முடியாது. காசு கொடுக்காம யாரையும் பெருமாள பார்க்க விடமாட்டாங்க, காசு கொடுத்தா நீங்களும் பார்க்கலாம் - தொண்டன்

Maraboor J Chandrasekaran said...
This comment has been removed by the author.
Maraboor J Chandrasekaran said...

குறும்பன்,
உங்கள் இரு கருத்தையும் நான் ஆமோதிக்கிறேன். சரியாகப் படியுங்கள். பெரியாரை சரியாகப் புரிந்து கொள்ளாத இன்றைய தொண்டர், அப்படி பேசுவதுபோல் எழுதியுள்ளேன். சத்தியராஜை தவறாக சொல்லவில்லை.
திருவரங்கம் கோவிலில் எனக்கும் பிடிக்காத செய்கை காசு பிடுங்குவதுதான். ஆனால் முற்றிலும் தரிசனமே இல்லை என்று கிடையாது. 'சும்மா' பார்க்கப் போகிறவர்கள், ஓரிரு நொடிகளில் 'முன்னுக்கு'த் தள்ளப் படுவர். அதுவும் வருந்தத்தக்க விஷயம்தான். மாற வேண்டும்.

Maraboor J Chandrasekaran said...

SK,உங்கள் வேண்டுகோளுக்கு நன்றி. பெரியாரை சரியாகபுரிந்து கொள்ளாமல், அவரது ஏனைய நல்ல சிந்தனைகளை காற்றில் பறக்கவிட்டு, வெறும் இறைவனை (இந்து இறைவனை மட்டும்) பழிக்கும் கூட்டத்துக்கு எழுதிய பதிவு இது. நிஜத்தை நேராகச் சொன்னால் 'சுறுக்' கென இருக்குமென்பதால் தான், நகைச்சுவையாகச் சொன்னேன். எவர் மனமும் கோண எழுதுவது என் வேலை அல்ல. அது தவிர "எல்லாம் முடிந்த பிறகு" என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். என்ன முடிந்தது? அவர்கள் எல்லாக் கோவில்களின் முன்பும் 128 சிலைகளை வைத்து, ஒரு புதிய டிருகு வலியை உருவாக்குகிறார்கள், வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்- அதே சிலையை ஒரு மசூதியின் முன்போ, சர்ச்சுக்கு முன்போ வைப்பார்களா? அவர்களும் கடவுளை நம்புகிறார்களே?

Maraboor J Chandrasekaran said...

Hariharan, தனி மனிதத் தாக்குதலில் தயவு செய்து இறங்கவேண்டாம். நாம் மாற்ற முயல்வது மனிதருள் உள்ள தவறான சிந்தனைகளைதான். பெரியாரின் மற்ற கொள்கைகள் காற்றில் போயின. வெறும் இந்து இறைவன் எதிர்ப்பு மட்டும் பரவியுள்ளது. ஏன்?

Hariharan # 03985177737685368452 said...

சூரமணி தனிமனிதரா? பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பலனடைகின்ற நபர், தனது சமூதத்திற்கு தகுந்த ஆக்கமான வழிகாட்டத்தெறியாத திறனற்ற, தற்குறி தலைவன்கள் விமர்சனத்தில் இருந்து தப்பிக்க "தனிமனிதத் தாக்குதல்" என்கிற போர்வை பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

முதலில் இங்கே சூரமணி என்பதே கற்பனைப் பாத்திரம் தானெ சந்துரு!
:-))) பின்னே இங்கு தனிமனிதத் தாக்குதல் என்பது எப்படி சாத்தியம்?

ஈயம், பித்தளையான தனிப்பாத்திரத் தாக்குதலும் செய்யக்கூடாதா? அப்போ படைப்பை எப்படித்தான் விமர்சனம் செய்வது படிக்கிறவர்கள்!

படைக்கப்பட்டதில் சூப்பர் பாத்திரம் மணிமேகலை கையிலிருக்கும் அட்சயபாத்திரத்தினும் நல்ல பாத்திரம் சூரமணி பாத்திரம் எனவே சூரமணி பாத்திரம் வாழ்க! என்று சுயமரியாதை, பகுத்தறிவு இயக்கங்கள் மாதிரியே ஆக்கமாகச் செயல்படவேண்டுமா? :-)))

Maraboor J Chandrasekaran said...

hariharan, விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுவாழ்வில் வந்துவிட்டால், விமர்சனம் வரத்தான் செய்யும். வரட்டும் :)படைப்புகளையும் விமர்சனம் செய்வார்கள். செய்யட்டும் :)

bala said...

//முதலில் இங்கே சூரமணி என்பதே கற்பனைப் பாத்திரம் தானெ சந்துரு!
:-))) பின்னே இங்கு தனிமனிதத் தாக்குதல் என்பது எப்படி சாத்தியம்?//

சந்துரு அய்யா,

ஹரிஹரன் அய்யா சரியாகத் தான் சொல்லியுள்ளார். சூரமணி முதலில் மனிதனா என்பதே சந்தேகம்..அதுவும் தி க என்ற கேவலமான கழகத்தின் தலைவர் என்ற முறையில் அவரை விமர்சிப்பது தனி மனித தாக்குதல் ஆகாது.

பாலா

Barath said...

சூப்பர். ரொம்ப சூப்பர். கற்பனை மாதிரி இல்ல. பெரியாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

//\"எல்லாம் முடிந்த பிறகு\" என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். என்ன முடிந்தது? அவர்கள் எல்லாக் கோவில்களின் முன்பும் 128 சிலைகளை வைத்து, ஒரு புதிய டிருகு வலியை உருவாக்குகிறார்கள், வாதத்துக்கு வைத்துக் கொள்வோம்- அதே சிலையை ஒரு மசூதியின் முன்போ, சர்ச்சுக்கு முன்போ வைப்பார்களா?//

பெரியார் இல்லை என்றால் உங்களை மாதிரி ஆசாமிகளெல்லாம் முதற்கண் கோவிலுக்குள் போயிருக்கமுடியுமா என்று உங்கள் மனச்சாட்சியை முதலில் கேட்டுக்கொள்ளுங்கள், கிண்டல் சுண்டலையெல்லாம் பிறகு வைத்துக்கொள்ளலாம். கடவுள் இல்லையென்று சொன்ன ஆள் இந்துக் கோயில்களுக்குள் அனைவரும் நுழையமுடிவதற்குப் போராட்டம் நடத்தியதின் பின்னுள்ள தனிமனித சுயமரியாதைத் தாத்பர்யம் உங்களை மாதிரி ஆட்களுக்கே விளங்கவில்லையென்றால் பிறருக்கு எங்கே புரியப்போகிறது!! மசூதிக்குள்ளும் சர்ச்சுக்குள்ளும் வர அந்தந்த மதங்கள் ஆள்பிடித்துக்கொண்டிருந்தபோது ஆட்களை கோயிலுக்குள்ளேயே வரவிடாமல் உதைத்துத் தள்ளிக்கொண்டிருந்த இந்துமதத்தின் கேடுகெட்ட சக்திகள் இந்துமதத்தை ஒரேயடியாக குழிதோண்டி மூடுவதற்கு முன்னால், அனைவரையும் உள்ளே நுழையச்செய்வதன்மூலம் இந்துமதம் நிலைபெற பெரியார் உதவிசெய்தார் என்று அதே குதர்க்கத்துடன் சொல்லலாமா? உங்களை மாதிரி ஆசாமிகள் அதற்காகவாவது 108 என்ன, 1008 பெரியார் சிலை வையுங்கள், பிறகு போய் மசூதி முன்னாலும் சர்ச் முன்னாலும் பெரியாரை வைக்கிறதா இல்லையா என்று கேட்கலாம். இந்தக் கொம்புசீவலுக்கு உங்களை மாதிரி படித்த விவரந்தெரிந்த ஆட்களும் போய் வலியத் தலையைக் கொடுப்பதுதான் வருந்தத்தக்க விஷயம். எது எப்படி இருந்தாலும், அது உங்கள் விருப்பம், யாரால் என்ன சொல்லமுடியும். கோயிலுக்குள் வராதே, கர்ப்பக்கிரகத்துக்குள் காலை வைக்காதே வெளியில் போ என்று யாராவது உம்மைக் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளினால் அப்போது ஒருவேளை புரியுமோ என்னவோ.

Maraboor J Chandrasekaran said...

வருக; நன்றி, அடடா!

==============================
அய்யா அனானி, இனிமேல் அனானிகளுக்கு பதில் சொல்லகூடாது என்று எண்ணியும், உங்களைப் போல் அவசரமாய் படிப்பவர்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஸ்K சொன்னார்'எல்லாம் முடிந்தது' என்று. நான் முடியவில்லை என்றுதான் சொன்னேன். இன்று எந்த கோவிலுக்குள் யாரும் நுழைய முடியாது? ஓரிரு கோவில்களில் (கண்டதேவி) போலீஸ் பாதுகாப்புடன் எல்லாரும் ஒன்றாய் தேர் இழுக்க வைத்தார்களே? நான் சர்ச்சுகளையும் மசூதிகளையும் ஒப்பிட்டுச் சொன்னது, ஒரு உதாரணத்துக்கு. அதற்குமுன் பெரியார் சிலை வைக்க முன்வருவார்களா தி,க காரர்கள் என்பதே கேள்வி. பெரியாரின் தத்துவத்தை சரியாக புரிந்து கொள்பவர்கள், சிலையே வைக்கமாட்டார்கள். அதையும் ஒரு கடவுள் கண்ணில் தினமும் படும்படியாக வைக்கமாட்டார்கள். அதுதான் வேதனை. நிஜ பெரியாரைப் புரிந்தவர்கள் என் வாதத்தையும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
//கொம்பு சீவுவது// என எழுதியுள்ளீர்கள். அது என் வேலையில்லை. கொம்பு என்று இருந்தால் தானே சீவுவது. அதேபோல், இது கண்மூடித்தனமாய் ஓடும் கொம்பில்லா மாடு. சீவவே வேண்டாம். அதுவே மொண்ணை கொம்பால், முட்டி மோதி வீழ்ந்துவிடும். கட்டாயம் பெரியார் இப்போது நடக்கும் கூத்தை ஆதரிக்க மாட்டார்! பெயர் இட்டு, [அனாமத்தாய் இல்லாமல் ;) ] என் கருத்தை வெளியிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் இஷ்டம்.