02 March 2006

சிரிச்சுப் பழகணும், சிரிச்சுப் பழகணும்!

சிரிச்சுப் பழகணும், சிரிச்சுப் பழகணும்
கால மால நேரங்காலம் ஆளு யாரு பார்க்கவேணாம் (சிரிச்சுப் பழகணும்)
அடுத்தவங்க வணக்கம் சொன்ன அமைதியாகச் சிரி,
எடுத்துக்கைக் கூப்பி நீயும் அன்பு வலை விரி
மனுஷன் கவலை கேட்டா அதை மறக்க சொல்லு- 'சிரி'
சீரியசு ஆளைப்பார்த்தா, சினம் தணிக்க சிரி!
காரியத்தில் கவனம் வேணும், கண்ணினாலே சிரி
போகுமிடம் பொலிங்கிடவே, பெருமை கொள்ளச் சிரி
நோயி நொடி, தூரப்போகும், பசித்திடவே சிரி
ரொம்ப வேணாம் சிரி, இடம் அறிந்து சிரி
மிஞ்சாமல் சிரி, மனம் விட்டுச் சிரி;
ஆண்டவன் அருளிருக்க விளக்கு போல் சிரி
கண்டவன் மனம் மயங்க உள்ளிருந்து சிரி
மனுஷன் உலகில் வாழ என்றும், சிரிப்பதுவே சரி! (சிரிச்சுப் பழகணும்)

No comments: