01 March 2006

வாய்விட்டுச்சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு பழமொழி.நெஜம்தாங்க. ரொம்பவே சிரிச்சா, "வேற இடத்துலே" ர்ந்து வரதா முடிவு பண்ணுவாங்க.யோசிச்சுச் சிரிச்சா, சிரிக்கக் கூட காசு கேப்பாம்போல- ன்னு சொல்வாங்க!சரி, புன்னகைச்சா, பல் வலி போலருக்குன்னு சொல்லிடுவாங்க!அப்ப, சிரிக்குறதுல எவ்வளவு கஷ்டமிருக்கோ, அவ்வளவு நல்லதும் இருக்கு.
மெரீனா பீச் கிட்ட காந்தி சிலை கிட்ட காலைல நடந்துபோறவங்க பார்த்துருப்பாங்க! ஒரு 20 பேர் தனியா நின்னுகிட்டு (ரவுண்டா..) 'ஹ¤ம்'னு ஸ்டார்ட் செஞ்சு, 'கர்'னு கியர் போட்டு, 'ஹாஹா, ஹாஹான்னு' சிரிப்பாங்க பாருங்க, பார்க்குறவங்க கூட அந்த கோஷ்டியப் பார்த்து, 'சிரிச்சுவை'ப் பாங்க! கேட்டா, ஹியூமர் க்ளப்னு சொல்வாங்க!
ஏண்டா, வேல மெனக்கெட்டு, இப்படி சிரிக்க வரேங்கன்னு கேட்டா, "வீட்ல எங்க சார் சிரிக்க முடியுது?ஒரு பக்கம் பொண்டாட்டி; அவ நல்ல மூட்ல இருந்தா சிரிப்பு, இல்லன்னா, செருப்பு! பசங்க, இவனுங்க நம்ம கிட்ட பேசறதே ரொம்ப கம்மி! 'ஏண்டா, ஸ்கூல் போகலயா?' ன்னு கேட்டா, பெரியவனும் சின்னவனும், 'ஆதி' விஜய் ஸ்டைல்ல ஒரு லுக் விடறாங்க!அவங்க அம்மாவேற பசங்களுக்கு சப்போர்ட்! "சும்மா, அதுங்கள கிளப்பாதீங்க; யெங்கயோ போவீங்களே, சிரிப்பா சிரிக்க, பேசாம ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க!"ன்னு! இது எப்படியிருக்கு!?
அழறதுக்கு 43 தசைங்க வேல செஞ்சாதான், நிஜம்மாலுமே, நம்ம அழறாப்ல இருக்கும்; ஆனா,சிரிக்க 17 தசைங்க போதுமாம்! கஷ்டப்பட்டு அழறத விட, பேசாம - "சிரிச்சுவை!"
முடிஞ்சவறைக்கும் சிரிக்க அதோடு சிந்திக்க வைக்கிறேன். கொஞ்சம் மேட்டர் சீரியஸ் ஆகிற இடங்கள்ல, பெரிசுபடுத்தாம, தயவு செஞ்சு, "சிரிச்சுவை"ங்க!

No comments: